Thursday, December 2, 2010

மன்மதன் அம்பு, காவலன் உட்பட்ட ஏழு படங்கள் இம்மாதம் திரையில்



             கமலின் மன்மதன் அம்பு மற்றும் விஜய்யின் காவலன் உள்ளிட்ட  ஏழு படங்கள் இம்மாதம் திரைக்கு வரவிருக்கின்றன.  வருடத்தின் கடைசி மாதம் என்பதால் 2011 தொடங்குவதற்கு முன்னரே படங்களை வெளியிடுவதில் தயாரிப்பாளர்கள் மும்முரமாக உள்ளனர்.   சசிக்குமாரின்  ஈசன்,  கேப்டனின் விருதகிரி, சூர்யாவின் ரத்த சரித்திரம், ஆர்யாவின் சிக்குபுக்கு மற்றும் தா போன்ற படங்களே திரைக்கு வரவிருக்கின்றன.

இவற்றில் ரத்த சரித்திரம், சிக்கு புக்கு, தா ஆகிய மூன்று படங்களும்  இம்மாதம்  மூன்றாம் திகதியும்.   விருதகிரி இம்மாதம் பத்தாம் திகதியும். மன்மதன் அம்பு, மற்றும் ஈசன் போன்ற படங்கள் இம்மாதம் பதினேழாம் திகதியும்.  காவலன் இம்மாதம் இருபத்திநான்காம் திகதியும் வெளி வரவிருக்கின்றன. என்பது தகவல்.  மேலும் மன்மதன் அம்பு  வெளியாவதற்கு இன்னும்  இரண்டே வாரங்கள் உள்ள நிலையில்.  அது பற்றி எந்த விளம்பரங்களும் வராதது கமல் ரசிகர்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
                                 அத்தோடு விஜயின் படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவியதால் அவரது ரசிகர்கள் காவலன் வருகைக்காக பெருத்த  எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள்.  நாமும் பொறுத்திருந்து பார்ப்போம்

3 comments:

எப்பூடி.. said...

காவலன் இம்மாதம் வருவதற்கான சாத்தியம் மிகமிக குறைவென்று நினைக்கிறேன், மன்மதன் அம்பு கமல் படம் என்பதை தாண்டி உதயநிதி படம் என்பதால் பெரிய திரை அனைத்தையும் 'அன்பாக' உதயநிதி ஆட்கள் எடுத்துவிடுவார்கள், இதனால் பெரிய திரை அரங்கிற்காக காவலன் காத்திருக்க வேண்டி வரலாம் !!!!

தொடர்ந்தும் எழுதுங்க.

எப்பூடி.. said...

பின்னூட்டும்போது Word Verification இல்லாமல் செய்தால் வசதியாக இருக்கும்

ஐயையோ நான் தமிழன் said...

:"அன்பாக"

புரிகிறது..............

உங்கள் ஆதரவிற்கு என் கோடானு கோடி நன்றிகள்..... கண்டிப்பாக என் எழுத்து தொடரும்........

12ம் திகதி உலக சூப்பர் ஸ்டார், ஸ்டைல் மன்னன், எங்கள் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு பதிவு எழுதலாம் என இருக்கிறேன். ஒரு வேளை அதில் ஏதாவது தவறுகள் இருந்தால் மன்னிக்குமாறு இப்பொழுதே உங்களையும் அவரது கோடானு கோடி ரசிகர்களையும். கேட்டுக்கொள்கின்றேன்.