Sunday, December 12, 2010

உயர் ஆதிரன் (super star)உதித்த நாள் இன்று


"அபூர்வ ராகங்களில்" திரையுலகுக்கு
"மூன்று முடிச்சு" போட்ட
"ராஜாதி ராஜா"வே திரையுலகின்
"மன்னனே" எங்கள் 
"பாட்ஷா"வே
"தர்மத்தின் தலைவனாய்" நின்ற
"தர்மதுரை"யே இங்கே
 "ஆறிலிருந்து அறுபது வரை" உன் ரசிகர்கள்தான்
"அவர்கள்" எல்லாம்  ரசிகர் - எனக்கு நீ
"குரு சிஷ்யன்" அல்லனோ நான் உனக்கு
"எந்திரா" உமக்கு என்றும் அந்த
"ராகவேந்திரா"வின்
"பாபா"ஜியின் அருள்  கிடைக்கட்டும்
                                                                          





                            அன்போடு சிஷ்யன்

Wednesday, December 8, 2010

சூப்பர் ஸ்டாருக்கு அறுபதாம் கல்யாணம்

      இம்மாதம் பன்னிரண்டாம் திகதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு 60 வயது பூர்த்தியாகின்றது. இதனை முன்னிட்டு அவருக்கும் அவரது மனைவி
லதா ரஜினிகாந்த் அவர்களுக்கும்  வருகின்ற பத்தாம் திகதி  அறுபதாம் கல்யாணத்தை நடாத்த அவர்களின் மகள்களும், மருமகன்களும் விருப்பப்படுகின்றனராம்.

ஆகவே  நாளைய தினம் சூப்பர் ஸ்டார் வீட்டில் அவருக்கு திருமணம்  நடைபெற உள்ளது.

காலை 10 மணிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு அவரது திருமணம் நடைபெற உள்ளது.

முக்கிய குறிப்பு:  இந்த விழாவில்  அவரது குடும்பத்தினர் மட்டும்தான் கலந்து கொள்கிறார்கள்.


(என் அன்பான குருஜியும் அவரது அன்பு மனைவியார் திருமதி லதா ரஜினிகாந்த் அவர்களும் இன்னும் பல காலம்  சந்தோசமாய் வாழ இந்த சிறியோன் இறைவனை வேண்டுகின்றேன்)



  அது என்ன அறுபது?

இல்லற வாழ்வை......
இத்தனை காலமாய்.......
இன்பமாய் கையாண்ட  - எம்
இனிய எந்திரா.............

அது என்ன?.....
அறுபதாம் கல்யாணம்.....
நின் ஸ்டைலுக்கும் அழகுக்கும் எங்கே ஆனது அறுபது?....

ஓ.......................
நான் சிந்தித்தேன்.......
இது நின் உடலுக்கும் வயதுக்கும் தான் அறுபதாம் கல்யாணமோ..............
நின் மனதுக்கு இது என்னமோ.........
பதினெட்டின்.........
படிநிலை தான்.......

ஆனது ஆயிற்று.........
நின்றன்  இல்வாழ்வில்..................
இன்னும் பல நாள்......
இன்பமது பொங்கிட........
இந்த.................
அன்பான....................
சிஷ்யனும்......................
அவன்தன் ஆஞ்சநேயனை.......
வேண்டுகின்றான்...............

                                                                                                    என்றும் உங்கள்
                                                                                                          சிஷ்யன்
                                                                                                         கு.ருபிலன்

(என் மனதில் பட்டவற்றை வார்த்தைகளாய் உருக்கொடுத்துள்ளேன். தவறுகள் இருந்தால் படிப்பவர்கள் மன்னிக்கவும்)

Monday, December 6, 2010

'இளைஞன்' இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார்

தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் எழுபத்தைந்தாவது கதை திரைக்கதை எழுத்தில் கவிஞர் பா.விஜய் நடித்துள்ள படம் 'இளைஞன்'  இத்திரைப்படத்தின் இசைக்குறுந்தட்டினை கலைஞர் வெளியிட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள்அதனை பெற்றுக்கொண்டார்.
                                       மேலும் அந்த விழாவில் பேசிய சூப்பர் ஸ்டார் "நான் ஒரு நடிகனாக இருப்பதால் எனது உடம்புக்கு வயதாகி விடும் ஆனால் கலைஞரின் பேனாவிற்கு இன்னும் வயதாகவில்லை. அந்த விடயத்தில் அவர் இன்னும்  இளைஞனாகவே இருக்கிறார். இன்னும் பல காலத்துக்கு அவரை கலையுலகம் இளைஞனாகவே வைத்திருக்கும்.  இன்னும் நிறைய பேசலாம் ஆனால் நான் பேசி அவரது நேரத்தை எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. என்று கூறி அவரது பேச்சை முடித்துக்கொண்டார்.
      அவரைத்தொடர்ந்து பேசிய கலைஞர் என் அன்புத்தம்பி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நான் இவ்விழாவிற்கு அவரை அழைத்ததும் எந்த வித மறுப்புமின்றி உடனே புறப்பட்டு வந்து விட்டார்.  காரணம் அவர் கலையுலகத்தின் மீது வைத்திருக்கும் அன்பும் மரியாதையும். என் மீது கொண்ட நட்புண்ர்வும் தான். காரணம் என்று கூறினார்.



ஆக கலைஞரின் இளைஞனின் இசைத்தட்டை எமது என்றும் மாறா. இளைஞன் பெற்றுக்கொண்டார்.

Thursday, December 2, 2010

மன்மதன் அம்பு, காவலன் உட்பட்ட ஏழு படங்கள் இம்மாதம் திரையில்



             கமலின் மன்மதன் அம்பு மற்றும் விஜய்யின் காவலன் உள்ளிட்ட  ஏழு படங்கள் இம்மாதம் திரைக்கு வரவிருக்கின்றன.  வருடத்தின் கடைசி மாதம் என்பதால் 2011 தொடங்குவதற்கு முன்னரே படங்களை வெளியிடுவதில் தயாரிப்பாளர்கள் மும்முரமாக உள்ளனர்.   சசிக்குமாரின்  ஈசன்,  கேப்டனின் விருதகிரி, சூர்யாவின் ரத்த சரித்திரம், ஆர்யாவின் சிக்குபுக்கு மற்றும் தா போன்ற படங்களே திரைக்கு வரவிருக்கின்றன.

இவற்றில் ரத்த சரித்திரம், சிக்கு புக்கு, தா ஆகிய மூன்று படங்களும்  இம்மாதம்  மூன்றாம் திகதியும்.   விருதகிரி இம்மாதம் பத்தாம் திகதியும். மன்மதன் அம்பு, மற்றும் ஈசன் போன்ற படங்கள் இம்மாதம் பதினேழாம் திகதியும்.  காவலன் இம்மாதம் இருபத்திநான்காம் திகதியும் வெளி வரவிருக்கின்றன. என்பது தகவல்.  மேலும் மன்மதன் அம்பு  வெளியாவதற்கு இன்னும்  இரண்டே வாரங்கள் உள்ள நிலையில்.  அது பற்றி எந்த விளம்பரங்களும் வராதது கமல் ரசிகர்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
                                 அத்தோடு விஜயின் படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவியதால் அவரது ரசிகர்கள் காவலன் வருகைக்காக பெருத்த  எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள்.  நாமும் பொறுத்திருந்து பார்ப்போம்

Tuesday, November 30, 2010

இளையதளபதிக்கு கேரளாவில் சிலை

         இளைய தளபதி விஜய்க்கு  அவரது கேரள ரசிகர்கள் சிலை நிறுவியுள்ளார்களாம்.  தமிழ் நாட்டுக்கு அடுத்தபடியாக விஜய்க்கு அதிக ரசிகர்கள் உள்ள மாநிலம் கேரளா ஆகும். கேரளாவில் விஜய் நடித்த கில்லி, போக்கிரி, சிவகாசி போன்ற  படங்களை நூறு நாட்களுக்கு மேல் ஓட வைத்த பெருமை. கேரள ரசிகர்களையே சாரும். அவ்வாரு அண்டை மாநிலத்தில் புகழ் பெற்ற விஜய்க்கு.  இப்போது மேலும் பெருமை சேர்த்திருக்கிறார்கள்வரது கேரள ரசிகர்கள்.
                     அதுதான் அவருக்கு சிலை நிறுவியது. இந்த சிலை சாதாரணமாக  உள்ள சிலைகள் போல இல்லாமல். மிகவும் வித்தியாசமாக அமைக்கப்பட்டதாம். அப்படி என்ன விஷேசம் என்றால் இந்த விஜயை போலவே ஆடுமாம் (உடம்பை வளைச்சு நெளிச்சுன்னு நினைக்கிறேன் சரியாத்தெரியல்லை) அதாவது கை கால்கள் அசையக்கூடியவறு அமைக்கப்பட்ட சிலையாம்.
                                     சமீபத்தில் காவலன் படப்பிடிப்புக்கு சென்றிருந்த விஜயிடம் இந்த சிலையை ஒரு தேரில் எடுத்து வந்து காட்டினார்களாம் அவரது கேரள ரசிகர்கள்.  அதை பார்த்தவுடன் உணர்ச்சிவசப்பட்ட விஜய் அவரது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தாராம்.

   (சரிங்ணா  அப்போ தமிழ் நாட்டுல எப்போங்ணா சிலை வைக்க போறாங்ணா)

Sunday, November 28, 2010

பொங்கலுக்கு ஆட்டம் போட வரும் - ஆடுகளம்

தனுஷின் உத்தமபுத்திரனை தொடர்ந்து திரைக்கு வரவிருக்கிறது ஆடுகளம். ஏற்கனவே பொல்லாதவன் என்கின்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் வெற்றிமாறன் தான்.  இதனையும் இயக்குகிறார். இது ஒரு கிராமத்தை சுற்றி நடக்கும் கதையாக இருக்குமாம்.  தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் வெளி வந்த பொல்லாதவன் போன்றே இதுவும் சிறந்த வெற்றி படமாக இருக்கும் என  எதிர்பார்க்கப்படுகிறது.
                                                        இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது டிசம்பர் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட ஆடுகளம் இப்போது பொங்கலுக்கு தள்ளிப்போடப்பட்டிருக்கிறது .  பொங்கலுக்கு கண்டிப்பாக வெளிவரும் என சன் பிக்சர்ஸ் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது.

Friday, November 26, 2010

சினேகாவின் ஆசை

பொதுவாக தமிழ் நடிகைகள் எல்லோருக்கும் வரும் ஆசை இப்போது  புன்னகை இளவரசி சிநேகாவிற்கும் ஏற்பட்டுள்ளது. அது என்ன புதிய ஆசை என்பதற்கு எதுவும் இல்லை சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து நடிக்க வேண்டும். என்பதே அந்த ஆசை. எந்திரனின் தாக்கம் உலக சினிமாவில் வெகுவாக பாதித்திருக்கிறது. சில நாட்களுக்கு முன் இந்தி நடிகையான தீபிகா படுகோன் எமது சூப்பர் ஸ்டாருடன் நடிக்க ஆசை உள்ளது. என கூறி இருந்தது நினைவிருக்கும் என  நினைக்கிறேன் இந்த ஆசை இப்போது சினேகா அம்மையாருக்கும் ஏற்பட்டிருக்கிறது.

                                               பெருந்துறையில் சுசி ஈமு கோழி உணவகம் திறப்பு விழாவில் கலந்து கொண்ட சினேகாவை நிருபர்கள் பேட்டி கண்டனர். அப்போதுதான் சினேகா இதனை கூறினார்.  தான் நடித்த பவானி திரைப்படம் சீக்கிரமே வெளியாகும் என கூறியதோடு. தனக்கு பிடித்த நடிகர் கமலஹாசன்   நடிகை  ராதிகா.  எனவும் கூறிய சினேகா எனக்கு ரஜினியின் ஸ்டைல்  ரொம்ப பிடிக்கும் அவருடன் ஒரு படத்திலாவது நடிக்க ஆசை எனவும் கூறினாராம்.(அவரோடு நடிக்க யாருக்குத்தான்ஆசை இல்லை)

Friday, November 12, 2010

மைனாவை மனம் திறந்து பாராட்டிய சூப்பர் ஸ்டார்

                                                  அண்மையில் பிரபுசாலமன் இயக்கத்தில்  வெளி வந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் மைனா திரைப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  குடும்பத்துடன் சென்று பார்த்தார். இப்படம் முடிந்து வெளியே வந்தவுடன் படத்தின் இயக்குனரை கட்டி அணைத்துமுத்தம் கொடுத்த சூப்பர் ஸ்டார்.  இது உண்மையிலேயே ஒரு திராவிடர்களின் படம் எனக்கூறியதோடு.   இப்படியொரு படத்தில் நான் நடிக்காமல் போய் விட்டேனே என்று வருத்தத்துடன் கூறினாராம்.  படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்  தனது வாழ்த்தினை எழுத்து மூலமாகவும் கொடுத்துள்ளாராம். சந்தோச உச்சத்தில் இருக்கிறார் பிரபுசாலமன். யாரையும் தானாக முன் வந்து பாராட்டுவதில் சூப்பர்ஸ்டாருக்கு இணை அவரேதான். 
சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார் தான்

பாங்காக் பறந்த 'தல' மங்காத்தா படப்பிடிப்பு

       தலயின் 50வது படமான மங்காத்தா படப்பிடிப்பு துரிதமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இப்படத்தை மிகவும் வித்தியாசமாக  எடுக்க வெங்கட்  தீர்மானித்துள்ளாராம். அதனால் இப்படத்தின் முக்கியமான காட்சிகள் வெளி நாடுகளில் எடுக்கப்படுகின்றதாம். இதன் காரணமாக அஜீத், வெங்கட்பிரபு , மற்றும் படப்பிடிப்பு குழுவினர் பாங்காக் சென்றுள்ளனர். இவர்களுடன் சேர்ந்து படத்தின் நாயகிகளான த்ரிஷா,லட்சுமிராயும் சென்றுள்ளனராம்.  அங்கு சில வாரங்கள் படப்பிடிப்பு முடிந்த  பிறகு  மேலும் சில  வெளி நாடுகளில் படபிடிப்பு நடைபெற இருப்பதாக. தகவல்கள். வருகின்றன. 

Wednesday, November 10, 2010

கமலஹாசனின் தலைவன் இருக்கின்றான்

           மன்மதன் அம்பு படத்தை தொடர்ந்து கமல் அடுத்த படத்துக்கு தயாராகி விட்டார். 
             ஏற்கனவே கமலின் மருதநாயகம், மர்மயோகி, தலைவன் இருக்கின்றான். போன்ற மூன்று படங்களும்  இழுபறியில்  இருந்தன. ஆனாலும் சளைக்காத உலக நாயகன் இவற்றை விடுத்து உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் மன்மதன் அம்பு என்ற படத்தை நடித்து முடித்தார். அது  வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் இந்த நேரத்தில் கமல் இன்னுமோர் கூடுதல் தகவலை அறிவித்திருக்கிறார்.
                அவரது அடுத்த படம் என்னவாக இருக்கும் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு பதில் அளித்துள்ளார். அதாவது அவரது அடுத்த படம் தலைவன் இருக்கின்றான் தான் என்பதையும். அப்படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க, தான் அல்லது தனக்கு மிக நெருக்கமான யாரோ ஒருவர் தான் இயக்குவார் எனவும் தெரிவித்துள்ளார். 
                   
              இதற்கிடையில் உலக நாயகனின் மருத நாயகத்தில் சூப்பர் ஸ்டார் இணைவார். என்றும் கூடுதல் தகவல்கள் கசிகின்றன.  ஆனால் இது பற்றி ரஜினியோ, கமலோ எந்தவிதமான தகவல்களும் வெளியிடவில்லை

Tuesday, November 9, 2010

சூப்பர் ஸ்டாரின் சூடான திட்டம்

                    2 வருடத்துக்கும் மேலாக இழுத்தடித்த எந்திரனுக்கு பிறகு இப்பொழுது தான் ஓய்வாக இருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.  இதற்கிடையில் அவரது அடுத்த படம் பற்றி மெதுவாக தகவல்கள் கசிய ஆரம்பித்திருக்கின்றன. ரஜினியோ எந்திரன் திரைக்கு வந்த சில நாட்களிலேயே இமயமலைக்கு சென்று விட்டார்.
        இப்பொழுது அவரது அடுத்த ப்ளான் என்ன என்பது பற்றி கோடம்பக்கத்தில் கிசுகிசுக்க ஆரம்பித்து விட்டது. சமீக காலமாக ரஜினி, பி.வாசு இயக்கும் சந்திரமுகி பகுதி 2 ஆகிய வேட்டையன் படத்தில் அஜீத்துடன் இணைந்து நடிப்பார். எனவும், சில செய்திகள் வந்தன. அது மட்டுமன்றி எந்திரன் வெற்றியைத்தொடர்ந்து கலாநிதி மாறன் இயக்கப்போகும் படத்தில் சூப்பர் ஸ்டாரும், உலக நாயகனும் இணைந்து நடிக்கப்போவதாகவும். அந்த படத்தை ஷங்கர் தான் இயக்கப்போகின்றார் என்றும் அதன் பட்ஜெட் 500  கோடி  எனவும் தகவல்கள் வந்தன.
         இத்தோடு இன்னொரு கூடுதல் தகவலாக சூப்பர் ஸ்டார் பாட்ஷா பகுதி 2 ல் நடிக்கப்போவதாக கூட  தகவல் வருகின்றது.  ஆனாலும் இந்த வரிசையில் இப்போது இடம்பெற்றிருக்கும் தகவல்.   சூப்பர் ஸ்டார் அடுத்தாக நடிக்கும் படம் அவரது பால்ய நண்பரும் கலையுலக போட்டியாளருமாக கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இருந்து வரும் உலக நாயகன் கமலின்  மருத நாயகம் தான் என்பதாகும். மீண்டும் இரண்டு துருவங்களும் இணைந்தால் ரசிகர்களுக்கு அடுத்த தீபாவளி காத்திருக்கிறது.
                   ஆனாலும் அவர் மனத்தினில் என்ன திட்டம் வைத்திருக்கிறார் என்பது அந்த பாபாஜிக்குத்தான் வெளிச்சம்.

Thursday, November 4, 2010

தீபாவளி

இது என் முதல் பதிவு தீபாவளியை முன்னிட்டு பதிவு எழுதுகிறேன். தவறுகள் இருந்தால் மன்னிக்கவும். எல்லோருக்கும் என்னுடைய தீபாவளி நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
இப்பொழுது விடயத்துக்கு வருகிறேன் தீபாவளி என்றால் என்ன? அன்றைய  தினம்   நாம்  என்ன  செய்ய  வேண்டும்....... சாதாரணமாக  பலர்  சொல்லும்  ஒரே   விடயம்  பட்டாசு   கொழுத்த   வேண்டும்,  உறவினர் வீடுகளுக்கு  போக  வேண்டும்  சரி  வேறு என்ன  செய்யலாம்.  நன்றாக யோசித்து சில  பெரியவர்களிடம்  கேட்டு  நான் தெரிந்து  கொண்ட சில  விடயங்களை  உங்களுக்கும்  தருகிறேன் (யாம்  பெற்ற இன்பம் பெறுக  இவ்வையகம்) 
அதாவது   தீபாவளி அன்று  நாம் செய்ய  வேண்டியது முதலில்  எம்முடைய  சந்தோச தருணங்களை எல்லாம்  முடித்த(பட்டாசு   கொழுத்தல், உறவினர் வீடுகளுக்கு போய் வருதல்) பின்னர்.  எம்  வீட்டுக்கு  மஹாலட்சுமியை  வரவேற்க  வேண்டுமாம் அது  யாரது  மஹாலட்சுமி என்று கேட்டு விட  வேண்டாம்  அவர் தான்  காலாதி  காலமாக  செல்வத்துக்கு அதிபதியாக  இருப்பதாக  எம்மவர்களிடையே ஒரு  ஐதீகம்  உண்டு.  அதனால் அவரை வரவேற்க வேண்டுமாம்.
அதற்கு  என்ன  செய்ய  வேண்டும் வீட்டை  சுத்திகரித்து பூஜை அறையில் எல்லா கடவுளர்களையும்  வைத்து  பூஜை  செய்து பின்னர்  மஹா லட்சுமியை தோத்திரம்  பாடி  மகிழ்விக்க வேண்டுமாம் அப்படியெனில்  வீட்டில் செல்வம் கொட்டோ கொட்டென்று கொட்டுமாம்.........
என்ன  பூஜைக்கு எல்லோரும்  ரெடி ஆயிட்டிங்க போல இருக்கு....
Add caption


பி.கு:  இவை  சில  பெரியோர்கள் எனக்கு சொன்னது நான் உங்களுக்கு சொல்லியிருக்கிறேன் தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்   (என்னடா இவன்  சினிப்பிரியன் என்று பெயர் வைத்து கொண்டு தீபாவளி பற்றி சொல்கின்றானே என்று நினைக்காதீர்கள் எல்லாம் ஒரு  சென்டிமென்ட் தான்)

அப்பாடா........  ஒரு  மாதிரி   இன்னிக்கு  முடிச்சாச்சு........   இனி  நாளைக்கு  என்னாவ போவுதோ..............................

தயவு செஞ்சி  ஏதாவது   கருத்து   சொல்லுங்க  இல்லைனா  எனக்கு  மண்டையே  வெடிச்சிடும்