Monday, December 6, 2010

'இளைஞன்' இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார்

தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் எழுபத்தைந்தாவது கதை திரைக்கதை எழுத்தில் கவிஞர் பா.விஜய் நடித்துள்ள படம் 'இளைஞன்'  இத்திரைப்படத்தின் இசைக்குறுந்தட்டினை கலைஞர் வெளியிட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள்அதனை பெற்றுக்கொண்டார்.
                                       மேலும் அந்த விழாவில் பேசிய சூப்பர் ஸ்டார் "நான் ஒரு நடிகனாக இருப்பதால் எனது உடம்புக்கு வயதாகி விடும் ஆனால் கலைஞரின் பேனாவிற்கு இன்னும் வயதாகவில்லை. அந்த விடயத்தில் அவர் இன்னும்  இளைஞனாகவே இருக்கிறார். இன்னும் பல காலத்துக்கு அவரை கலையுலகம் இளைஞனாகவே வைத்திருக்கும்.  இன்னும் நிறைய பேசலாம் ஆனால் நான் பேசி அவரது நேரத்தை எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. என்று கூறி அவரது பேச்சை முடித்துக்கொண்டார்.
      அவரைத்தொடர்ந்து பேசிய கலைஞர் என் அன்புத்தம்பி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நான் இவ்விழாவிற்கு அவரை அழைத்ததும் எந்த வித மறுப்புமின்றி உடனே புறப்பட்டு வந்து விட்டார்.  காரணம் அவர் கலையுலகத்தின் மீது வைத்திருக்கும் அன்பும் மரியாதையும். என் மீது கொண்ட நட்புண்ர்வும் தான். காரணம் என்று கூறினார்.



ஆக கலைஞரின் இளைஞனின் இசைத்தட்டை எமது என்றும் மாறா. இளைஞன் பெற்றுக்கொண்டார்.

2 comments:

எப்பூடி.. said...

அந்த விழாவிலே

"ஊரெல்லாம் பலமா மழை பெஞ்சிட்டிருக்கு. வெள்ளத்துல வீடிழந்து, ரோடெல்லாம் டேமேஜ் ஆகி, மக்கள் நிறைய அவதிப்பட்டுக்கிட்டிருப்பாங்க. ஒரு முதலமைச்சரா கலைஞர் அய்யாவுக்கு அதைக் கவனிக்க வேண்டியது இருக்கு. எனவே என் பேச்சை நான் சீக்கிரமா முடிச்சிக்கிறேன்."

என்று கூறி கலைஞரை ஒருகணம் ஆடச்செய்துவிட்டார்.

ஐயையோ நான் தமிழன் said...

இந்த மாதிரி துணிச்சலான பேச்செல்லாம் நம்ம குருஜிக்கு மட்டும்தான் வருமண்ணா